இந்தியாவின் ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 16 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆவணங்களுடன் அந்நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் விண்ணப்பித்துள்ளது. குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பேடிஎம் நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பொதுப்பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அந்நிறுவனம் செபியிடம் விண்ணப்பித்துள்ளது. செபி அனுமதிக்கும் பட்சத்தில் வரும் நவம்பர் மாதத்தில் பொதுப்பங்கு வெளியீடு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீட்டிற்கு பேடிஎம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த 2010ஆம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியிருந்தது. ஏற்கனவே இந்த வாரத்தில் சொமோட்டோ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு அறிவிக்கப்பட்டிருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்