Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

+2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான மதிப்பெண்கள் பட்டியல் 19-ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன.

இந்த மதிப்பெண்கள், மாணவர்கள் 10-ஆம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம், 11ஆம் வகுப்பில் எழுத்துமுறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 20 சதவீதம், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு மதிப்பெண்களில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in ,www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் காணலாம். மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவுசெய்து மதிப்பெண்களை அறியலாம். மாணவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

மேலும் வரும் 22-ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்