Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: குழந்தை விற்பனை |சிலிண்டர் விலை உயர்வு| பிரிட்டன் -3வது டோஸ் தடுப்பூசி

கொரோனா நோய் தடுப்பு மையம் திறப்பு: சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய நோய் தடுப்பு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் விருது வழங்கினார்.

கோவாவேக்ஸ் - வல்லுநர் குழு அறிவுறுத்தல்: பெரியவர்களுக்கான கோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையை முதலில் முடிக்க வேண்டும் என சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்திற்கு மத்திய அரசின் வல்லுநர் குழு அறிவுறுத்தி இருக்கிறது.

குழந்தை விற்பனை - தம்பதிகள் உள்பட 5 பேர் கைது: மதுரையில் கொரோனாவால் இறந்ததாகக்கூறி நாடகமாடி 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. 5 பேர் கைதான நிலையில் முக்கிய குற்றவாளி தலைமறைவாகி உள்ளார். காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு - ஆட்சியர்: மதுரையில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என குழந்தைகள் விற்பனை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு: வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3 மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளது. தற்போது 825 ரூபாயில் இருந்து 850 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கக் கோரிக்கை: நெல்லையிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகளை வீசிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான காப்பீடு - கட்டணம் உயர்வு: தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகை 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரிப்பு: காஷ்மீர் வான்வெளியில் ட்ரோன்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்பிஐ-யில் பணம் எடுக்க இன்று முதல் கட்டணம்: எஸ்பிஐ சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும். மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு முறையும் 15 ரூபாய் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிறுசேமிப்பு வட்டியில் மாற்றமில்லை - மத்திய அரசு: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் அடுத்த 3 மாதங்களுக்கு மாற்றமில்லை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

செலவை 20% மிச்சப்படுத்துக - நிதியமைச்சகம்: செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 20 சதவிகிதத்தை மீதப்படுத்த வேண்டும் என கொரோனா சூழலில் செலவைக் கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

3ஆவது டோஸ் தடுப்பூசி - பிரிட்டன் முடிவு: கொரோனாவை தடுக்க பிரிட்டனில் 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்