சென்னையில் இன்னமும் 50 விழுக்காட்டிற்கு குறைவான மக்களே முகக்கவசம் அணிவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து முகக்கவசம் அணிபவர்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தின. கடந்த ஆண்டு அக்டோபர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு மார்ச், ஜூலை ஆகிய 4 மாதங்களில் 4 கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இதன்படி குடிசை பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 28 விழுக்காடு மக்களே முகக்கவசம் அணிந்திருந்தனர். அதுவே படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 41 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதுவே பிற பகுதிகளில், அக்டோபர் மாதம் 36 விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். தற்போது அந்த விகிதம் 47 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முகக்கவசம் அணிவோர் விகிதம் உயர்ந்திருந்தாலும் இன்னமும் அது 50ஐ கூட கடக்கவில்லை என்பதே உண்மை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்