Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அதிகபட்சமாக மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் Maglev ரயிலை அறிமுகம் செய்த சீனா!

சீனா மின் காந்த சக்தியில் இயங்கும் Maglev ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 600 கிலோ மீட்டராகும். பூமியிலேயே அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் இந்த ரயில்தான். 

இந்த ரயில் மூலம் பெய்ஜிங் முதல் ஷாங்காய் நகர் வரையிலான 1000 கிலோ மீட்டர் தூரத்தை 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே விமானத்தில் பயணித்தால் சுமார் மூன்று மணி நேரமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயிலின் கோச்களும், அதன் தண்டவாளமும் தொடர்பு ஏதும் இல்லாமல் மிதந்தபடி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனா பரிசோதனை முயற்சியாக சிறிய அளவில் சோதித்து வந்தது. 

image

இந்நிலையில் முழுவதும் சீனாவில் உருவான இந்த Maglev ரயிலை தற்போது நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுத்த உள்ளது. ஜப்பான் மற்றும் ஜெர்மனி மாதிரியான நாடுகளும் இந்த Maglev ரயிலை அறிமுகம் செய்ய முயன்று வந்தாலும் அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பிடிக்கும் செலவு ஒரு தடையாக அமைந்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்