சிறு வணிக நிறுவனங்கள் வங்கிகளில் வைத்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகள் ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு முடக்கப்பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சிறு வணிக நிறுவனங்கள் ஒரே ஒரு நடப்புக் கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும் என்றும் அவை வைத்துள்ள மற்ற நடப்புக் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வணிகருக்கு வேறு எந்த வங்கியிலும் நடப்புக் கணக்கு இல்லை என்ற பட்சத்திலேயே, அவரை தங்களிடம் நடப்புக் கணக்கு தொடங்க ஒரு வங்கி அனுமதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால், தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என வணிகர்களில் ஒரு தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். பல்வேறு நடப்புக் கணக்குகளை ஒரு சிறு வணிகர் வைத்திருக்க முடிவதால் முறைகேடுகள் நிகழ்வதாக புகார்கள் இருந்த நிலையில், இந்நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்