வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருப்பதால் உத்தராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை, மேக வெடிப்பு காரணமாக ஏற்கெனவே மகாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் நீடிக்கிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகரும் என்பதால் உத்தராகண்ட், ஜார்கண்ட் ,மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது தவிர பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்