கொரானாவை குணப்படுத்துவதாக கூறப்படும் நெல்லூர் ஆனந்தய்யாவின் மருந்தை தொடர்ந்து தயாரிக்க அனுமதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஆனந்தய்யா என்பவர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதனை அதிக அளவு உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க வேண்டுமென கோரியிருந்தார். உரிய ஆராய்ச்சி முடிவுகள் இல்லாததால் இந்த மருந்தை விநியோகிக்க மாவட்ட நிர்வாகங்கள் தடை விதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்ற நீதிபதி, கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்