Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஸ்டீபன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்டோரையும் இழிவாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

குமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18-ஆம் தேதி நடந்த ஒரு போராட்டத்தில் இந்துக் கடவுள்கள், பிரதமர் மற்றும் மத்திய - மாநில அமைச்சர்களை, பனவிளை பங்குத் தந்தை ஜார்ஜ் பொன்னையா இழிவாக விமர்சித்துப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதுபற்றி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜார்ஜ் பொன்னையா, போராட்ட ஒருங்கிணைப்பாளரான அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோரை கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், ஜாமீன் கேட்டு குழித்துறை நீதிமன்றத்தில் மனு;j தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, 2015-ஆம் ஆண்டு ஆர்.டி.ஓ.வை மிரட்டிய வழக்கிலும், 2017-ஆம் ஆண்டு ஒரு தாக்குதல் வழக்கிலும் ஸ்டீபன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குழித்துறை, பத்மநாபபுரம் நீதிமன்றங்களில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்டீபன் மீது ஏற்கெனவே 25 வழக்குகள் பதிவாகியுள்ளதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்