கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளார்
டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரையும் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி.நட்டாவையும் எடியூரப்பா சந்தித்து பேசினார். எடியூரப்பா முதலமைச்சராக தொடர கர்நாடகாவில் எதிர்ப்புகள் நிலவும் நிலையில் நடைபெற்ற இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இச்சந்திப்பை தொடர்ந்து எடியூரப்பா தனது ராஜினாமா முடிவை அறிவிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் இவற்றை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்ததுடன் இவையெல்லாம் வெறும் வதந்தியே என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் நிலுவையில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் மேகதாது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மட்டுமே பிரதமருடன் பேசியதாகவும் எடியூரப்பா விளக்கம் அளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்