ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கொழும்புவில் இன்று களம் காண்கிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் விளையாட இருக்கிறது. கோலி தலைமையிலான அனுபவம் வாய்ந்த டெஸ்ட் அணி இங்கிலாந்தில் இருப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த தொடர் முதலில் கடந்த 13 ஆம் தேதி தொடங்க இருந்தது. இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமானது. இலங்கை அணிக்கு ஷனகா தலைமையில் களம் காண்கிறது. இலங்கை அணி கடந்த சில மாதங்களாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இப்போது இந்தியாவுக்கு எதிரான அணியும் போதிய அனுபவம் இல்லாதவையாக இருக்கிறது. எனினும் இழந்த பெருமையை மீட்க கூடிய நிலையில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
இந்திய அணி இலங்கை மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நேரடி ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 9-வது முறையாகும். இதில் கடைசி 4 ஒரு நாள் தொடர்களை இந்திய அணி வரிசையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்