Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் - தமிழக அரசு

தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. 

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 2018 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் வெளிப்புற நோயாளிகள் துறையும், மருத்துவ மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடப்பணியோ அல்லது வேறு எந்த பணியுமோ தொடங்கவில்லை. ஆகவே மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான "ப்ராஜெக்ட் செல்"லை உருவாக்கி, இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குனர், உள்ளிட்ட அதிகாரிகளை நியமனம் செய்து வெளிப்புற நோயாளிகள் துறையையும் மருத்துவ மாணவர் சேர்க்கையையும் தொடங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத்தரப்பில், "மத்திய சுகாதாரத்துறை செயலர், தற்காலிக இடத்தினை தமிழக அரசு தேர்வு செய்வது குறித்து தமிழக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில், " தமிழக அரசு நடப்பாண்டிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது தொடர்பாக பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளது. பிற மாநிலங்களில் இது தொடர்பாக, அந்தந்த மாநில அரசுகளுடன், எய்ம்ஸ் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதனடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்காலிகமாக தேனி மற்றும் சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கையை நடத்த தேர்வு செய்யலாம். எய்ம்ஸ் நிர்வாகம் ஆய்வு செய்து பொருத்தமான இடத்தை தேர்வு செய்வதோடு, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தும் கொண்டால் மருத்துவ மாணவர் சேர்க்கைத் தொடங்க ஏதுவாக இருக்கும். அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தயாராக உள்ளது"என குறிப்பிடப்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பின்னர் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்