டெல்லியில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சந்தித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் சரத் பவாரை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்த நிலையில், இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று பரவலாக பேச்சு எழுந்தது. மேலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத் பவாருக்கு திட்டம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்த நிலையில் இந்த சந்திப்பு நடத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்