Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாரத்நெட் திட்டத்தில் தமிழக கிராமங்கள் தற்போது இல்லை - மத்திய அரசு தகவல்

அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி அளிப்பதற்கான பாரத்நெட் திட்டத்தில் தமிழகம் இடம்பெறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் எம்.பி., பாரிவேந்தர், பாரத்நெட் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தமிழகத்தில் எத்தனை கிராமங்கள் இடம்பெற்றுள்ளன என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசிங் சௌகான், பாரத் நெட் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் 16 மாநிலங்களை சேர்ந்த 3 லட்சத்து 61 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்த முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் , தற்போதைக்கு இந்தத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கிராமங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். தமிழகம் உள்பட மீதமுள்ள மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என பதில் அளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்