Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திறந்தநிலை கல்வியில் முதுகலை படித்தால் அரசுத் துறையில் பதவி உயர்வு இல்லை: உயர் நீதிமன்றம்

திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பத்திரப்பதிவு துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் முதல்நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கவில்லை என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன் திறந்தநிலை கல்வியில் மேற்படிப்பை முடித்தாலும் பதவி உயர்வுக்கு தகுதி என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்