Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரியலூர்: ஒரே கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு; 3 பேருக்கு கொரோனா

அரியலூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அரியலூர் மாவட்டம் பிலாக்குறிச்சி கிராமத்திலுள்ள மேலத்தெருவில் 39 பேர் ஒரே நேரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், மூவருக்கு கொரோனாவும் இருப்பது தெரிய வந்தது.
 
அதனையடுத்து கிராமத்திலுள்ள 500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் பிலாக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்