Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செப். 20 முதல் 'பூஸ்டர் டோஸ்' செலுத்த அமெரிக்கா அரசு முடிவு

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்திட, செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அனைத்து வயதினருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்க மக்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. இந்நிலையில், உருமாறிய கொரோனாவான டெல்டா வகை வைரஸ் அந்நாட்டில் அதிவேகமாகப் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, ஏற்கனவே போடப்பட்ட இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளைத் தொடர்ந்து, மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடுவதென அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

image

இப்பணிகள் நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, எட்டு மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ்களை செலுத்துவதென அந்நாட்டின் மருத்துவத்துறை அறிவித்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் பூஸ்டர் டோஸ்கள் செலுத்துவது தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்