ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோயில் பகுதியில் திமுக பிரமுகர் வில்லாயுதம் என்பவரின் வீடு உள்ளது. இவர், திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் வில்லாயுதம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, முறையாக வருமான வரி செலுத்தாதது உள்ளிட்ட புகார்கள் மதுரை அமலாக்கத் துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து இன்று வில்லாயுதம் என்பவர் வீட்டிற்கு வந்த 8 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீசார் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்