மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மூன்றாவது போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மொத்தம் மூன்று போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது இருந்தது. இந்நிலையில் முதல் வழக்கில் சிறையிலிருந்த பாபாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 22ஆம் தேதிமுடிவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற காவலில் இருந்த அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது 3வது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்