Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'5 மணி வரை மட்டுமே கடைகள்' - கோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களே நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருந்தார். அதன்படி இன்று முதல் ஆகஸ்ட் 3 கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
image
மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். அனைத்து சுற்றுலாதளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்கள் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்