பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையால் மதுரை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 165 ‘போக்சோ’ வழக்குகள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இதனால் கிராமப்புற மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன என ஒரு புகார் எழுகிறது. மேலும் வறுமை காரணமாக 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற காரணத்தினால், ‘போக்சோ’ மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன. மதுரை நகரில் கடந்த 8 மாதங்களில் மகளிர் காவல் நிலையங்களில் மதுரை நகர், தெற்குவாசலில் தலா 6, தல்லாகுளம்- 15, திருப்பரங்குன்றம் -11 என மாநகர் பகுதிகளில் மொத்தம் 95 ‘போக்சோ’ வழக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரை புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் திருமங்கலம்- 22, மேலூர்-9, உசிலம்பட்டி-6, ஊமச்சிகுளம்-9, சமயநல்லூர்-14, பேரையூர்-10 என மொத்தம் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்