Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோரிக்கையை ஏற்று பயணிகள் வண்டிகளை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை - சு.வெங்கடேசன் நன்றி

தங்களுடைய கோரிக்கையை ஏற்று சாதாரண பயணி வண்டிகளை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தமைக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்திய ரயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தான் கடிதம் எழுதியதுடன், வடசென்னை எம்.பி கலாநதி வீராச்சாமியும் தானும் ரயில்வே அமைச்சரிடம் நேரில் சென்று வலியுறுத்தியதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

image

அவர்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் 16.8.2021க்குள் வண்டிகளை இயக்குவதற்கான வசதிகளை செய்திடவும் கால அட்டவணைகளை அனுப்பி வைக்கவும் அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்தியா முழுவதும் பயணி வண்டிகள் விரைவில் இயக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்