Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்தது எஸ்.பி.ஐ

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்திருக்கிறது.
 
பருவகால சலுகையாக (Monsoon Dhamaka Offer) வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்திருக்கிறது எஸ்.பி.ஐ. வங்கி. மேலும், யோனோ செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது 0.05 சதவீதம் அளவுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.
இது தவிர பெண்கள் பெயரில் வீட்டுக்கடன் வாங்கும்போது 0.05 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.
 
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வட்டி 6.7 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த சலுகை மூலம் வீட்டுக்கடன் வாங்குவது உயரும். மேலும்  வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்திருக்கிறார். வீட்டுக்கடன் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் எனவும் வங்கி தெரிவித்திருக்கிறது. எஸ்பிஐ வங்கி இதுவரை ரூ.5 லட்சம் கோடிக்கும் மேலாக வீட்டுக்கடன் வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்