பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனையை தடை செய்ய சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் சட்டபேரவை தொடங்கியதும் கேள்வி நேரத்தின்போது, பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, ''தடை செய்யபட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தவிர்க்க தமிழக அரசு முன்வருமா?'' என கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'போதைப்பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11,247 பேர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 149.43டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருள் விற்பனை செய்வோர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்