மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடக் கோரி புதிய தலைமுறையில் செய்தித்தொகுப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு தமிழக அரசு மரியாதை செய்துள்ளது.
அதன்படி, வரும் ஆண்டு முதல் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன சின்னமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்