கொல்கத்தா மாநிலத்தில் 50 வயது நோயாளி ஒருவரின் மூளைக்கு அருகே மூக்கு குழி பகுதியில் சிக்கி இருந்த ஊசியை அகற்றி எடுத்துள்ளனர் மருத்துவர்கள். நோயாளிக்கு ஊசி சிக்கி இருந்த போதிலும் அவர் சுய நினைவுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு Craniotomy சர்ஜரி செய்து ஊசியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். வழக்கமாக இந்த அறுவை சிகிச்சை மூளை பகுதியில் கட்டி இருந்தால் மட்டுமே செய்யப்படும்.
அந்த நோயாளி முதலில் மூக்கு பகுதியில் இருந்து ரத்தம் வடிவதாக சொல்லி மருத்துவமனையை அணுகி இருந்தார். சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூக்கிலிருந்து மூளைக்கு அருகில் உள்ள பகுதி வரை நீளமுள்ள ஊசி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இயல்பாக இருந்தார். இறுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஊசியை அகற்றியுள்ளோம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்