பயங்கரவாத மற்றும் அழிவு சக்திகள் சில நேரங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் அவை நிரந்தரமானதாக இருக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் புகழ்பெற்ற சோம்நாத் கோயிலில் சில திட்டங்களை காணொலி முறையில் தொடங்கி வைத்து பிரதமர் இவ்வாறு பேசினார். அப்போது பேசிய பிரதமர், சோம்நாத் கோயில் பலமுறை அழிக்கப்பட்டதாகவும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் எனினும் ஒவ்வொரு பாதிப்பிற்கு பின்பும் அக்கோயில் இழந்த பெருமையை மீட்டு புத்தெழுச்சி பெற்றதாக பிரதமர் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தின் துணையுடன் சாம்ராஜ்யங்களை நிறுவுபவர்கள் நிலைத்திருந்ததாக சரித்திரம் இல்லை என்றும், ஏனெனில் மனித இனத்தை எப்போதும் ஓடுக்கிவிட முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் அவர்கள் குறித்து இந்தியா நேரடியாக விமர்சனங்கள் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் பிரதமரின் இப்பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்