சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் இன்று வெளியி்ட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலி்ல் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தை நெருங்கியுள்ளார். இந்திய கேப்டன் கோலி தொடர்ந்து 5-வது இடத்திலேயே உள்ளார்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் 180 ரன்கள் சேர்த்து ரூட் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் டெஸ்டிலும் ரூட் சதம் அடித்திருந்தார்.இதையடுத்து, தரவரிசையில் இரு இடங்கள் நகர்ந்து 2-வதுஇடத்துக்கு 893 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளார்.
0 கருத்துகள்