நீட் தேர்விலிருந்து விலக்குபெறும் சட்ட முன்வடிவு நடப்பு கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் ஏற்கெனவே நீட் தேர்வால் இறந்த அனிதாவின் பெயரை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ நீட் தேர்வு குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து ஆராயப்பட்டு அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர். எனவே சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நடப்பு பட்ஜெட் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்’’ எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்