கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் கூறப்பட்டது. இதையடுத்து வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலையில் கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்