Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

13 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிருப்தி - தலைமைச் செயலர் கடிதம்

தமிழ்நாட்டில் 13 சுகாதார மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தலைமைச் செயலர், இப்பணிகளை விரைவுபடுத்திடுமாறு அறிவுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திடும் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு, கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா முகாம்களை நடத்தியது. மேலும் தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து அறிவுறுத்திடும் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

image

அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் மிகவும் சிறப்பாக உள்ளது என அவர் கூறியுள்ளார். விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திருப்தியாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பின்தங்கிய சுகாதார மாவட்டங்களில், அப்பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி, அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இந்த மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இரு மடங்காக்கிடுமாறு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைப்படிக்க...காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்