Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'பண்டிகைகாலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துக' - மாநிலங்களுக்கு உள்துறை கடிதம்

பண்டிகை காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும் நவராத்திரி, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா தடுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என்று அதில் கூறியுள்ளார். திருவிழாக்கள், கூட்டங்கள், மத நிகழ்வுகள் போன்றவை மூலம் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் வரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

image

அதேநேரத்தில் தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் முதியவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இரண்டாவது டோசுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவை பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

இதனைப்படிக்க...“6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை” - மக்கள் நல்வாழ்வுத்துறை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்