Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யாருக்கெல்லாம் திருமண நிதி உதவி? - தமிழக அரசு விளக்கம்

திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்குத் தங்கம் உதவித்தொகை கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள தகுதியானோருக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது. வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது. மாடி வீடு - நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது.

image

ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்.

இதையும் படிக்கலாமே: களங்கிய ஓ.பி.எஸ் - தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்