மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
விவசாயிகள் சார்பில் பந்த் நடைபெற்றதையொட்டி பஞ்சாப் அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் உணவு பாதுகாப்புக்கு எதிரானது என்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்தார். இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்