Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தருமபுரியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை மையக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு, முதல்வர் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்குகிறார்.

image

மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குகிறார். காலை பத்து மணிக்கு ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சுத்திகரிப்பு, நீரேற்று நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் நிலையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிற்பகல் மூன்றரை மணிக்கு வத்தல்மலையில் உள்ள மலை கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மலைவாழ் மக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்