Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திருப்பதி வெங்கடாசலபதிக்கு செய்யப்படும் பூஜைகளில் விதிமீறல்? - விளக்கமளிக்க உத்தரவு

திருப்பதி வெங்கடாசலபதிக்கு செய்யப்படும் சடங்குகளில் விதி மீறல்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் சடங்குகளில் பாரம்பரியங்கள் மீறப்படுவதாகவும் அதனை விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவும் ஸ்ரீவாரி என்ற பக்தர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கோவில்களில் வழிபாட்டு நடைமுறைகள் என்ன என்பது தங்களுக்கு தெரியாது என்றும் எனினும் மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
image
மேலும் இந்த வழக்கு சட்டபூர்வமாக விசாரணைக்கு உரியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் ஆனால் திருப்பதி ஏழுமலையானுக்கு சரியான பாரம்பரிய முறைகளை கடைப்பிடித்து பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் நீதிபதிகளான தங்களது விருப்பம் எனக் கூறினார். முன்னதாக இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிடவில்லை என்றால், தான் தற்கொலை செய்து கொள்வேன் என மனுதாரர் உச்ச நீதிமன்ற பதிவாளரை மிரட்டியதாக தெரிகிறது. திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என அதற்கு தலைமை நீதிபதி பதில் கூறினார்.
 
 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்