சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு எப்படி அமர வைக்கவேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும் இது அரசியல் சாசன சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே அவர்கள் அமரும் இருக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒரு சட்டப்பேரவையில் உறுப்பினர்களை எங்கு எப்படி அமரவைப்பது, எப்படி கட்சிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது போன்ற முடிவுகள் முழுக்க முழுக்க சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்