பொதுப் பணித்துறையின் பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அரசு நேரடியாக அமைக்கும் சாலைக்கும், பேக்கேஜ் முறைக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஆவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேக்கேஜ் முறை ரத்து செய்யப்படும் என பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். கூடுதல் செலவினம் மற்றும் வேலை இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்