Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் அறிவிப்பு

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் 1-ம் தேதிமுதல் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

அதன்படி, பள்ளிக்கு வரும் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளாக கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறது. 15 நாட்களுக்குப் பின் அடுத்த 40 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கிட வேண்டும் எனவும், மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனை எட்டும் வரை புத்தாக்கப்பயிற்சி தொடரப்பட வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

பொது சொத்து சேதப்படுத்திய வழக்கு: தா.மோ அன்பரசன், மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு ரத்து 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்