Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அந்த இடங்களில் கடந்த 18-ம்தேதி சீல் வைக்கப்பட்டது. அன்று சோதனையின் போது ஒத்துழைப்பு இல்லாததாலும் அலுவலகம், வீடு பூட்டப்பட்டிருந்ததாலும் லஞ்ச ஒழிப்புத்துறை சீல் வைத்து சென்றது. இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
 
image
சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த 17ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்