Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகாவில் 7 பேருக்கு மரபணு மாற்றமடைந்த AY 4.2 வைரஸ் டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதி

மரபணு மாற்றமடைந்த AY 4.2 வகை கொரோனா வைரஸின் தாக்கத்தால் கர்நாடகாவில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா வகை கொரோனா வைரஸ் மாற்றம் கண்டு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு AY 4.2 என பெயரிடப்பட்டுள்ளது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பெங்களூரு நகரில் உள்ள கொரோனா ஆய்வு மையத்தில் மரபணு வரிசைப் படுத்தல் ஆய்வில் ஈடுபட்ட போது 3 பேருக்கு AY 4.2 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: அச்சுறுத்தும் AY 4.2 கொரோனா வைரஸ் - மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

image

கர்நாடகாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் 7 பேருக்கு மரபணு மாற்றம் கண்ட வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் முகக்கவசம் அணிதல் தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்