Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பூந்தமல்லி: பெண் போலீசுக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா நடத்திய சக போலீசார்!

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீசுக்கு காவல் நிலையத்தில் பூந்தமல்லி போலீசார் வளைகாப்பு விழா நடத்தினர். 

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் அனுசியா. இவருக்கு திருமணமான நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி என்பதால் அவரை அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் வந்தனர்.

இந்த நிலையில் தங்களுடன் பனிபுரிந்த பெண் போலீஸ் அனுசுயாவை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவருக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தார்.

image

இதன் பேரில் பூந்தமல்லி போலீஸ் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு சந்தனம், வளையல், பூ, மாலை அணிவித்தும் சீர்வரிசை பொருட்கள் வைத்தும் சீமந்த பாடலை சக பெண் போலீசார் பாடிய நிலையில் வளைகாப்பு விழாவை நடத்தினார்கள்.

இந்த வளைகாப்பு விழாவில் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் சக போலீசார் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்