Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெகாசஸ் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - என்.ராம் கருத்து

பெகாசஸ் விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய 'பெகாசஸ்' உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. என்.ராம் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரை ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான 3 பேர் குழு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெகாசஸ் உளவு சர்ச்சை தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்ற கண்காணிப்பின்கீழ் நடைபெறும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

Is my phone at risk? How the Pegasus spyware works

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழுவில் அலோக் ஜோஷி, சந்தீப் ஓபராய் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 'தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் என்றாலும் குடிமக்களின் தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டியதும் முக்கியம்' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது; வரவேற்கிறேன் என்று மனுதாரரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்