மாளிகை போன்ற வீடுகட்டி வரும் இளங்கோவன், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ரகசிய விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்டார்.
இளங்கோவன் சேலத்தில் மாளிகை போன்ற பிரமாண்ட வீடுகட்டி வருகிறார். அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது இங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததை கண்டுபிடித்தனர். புதிதாக கட்டப்படும் வீட்டால் லஞ்சஒழிப்புத் துறையிடம் இளங்கோவன் வசமாக சிக்கிக் கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்