Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நானோ காரை காட்டிலும் சிறியது: சீனாவில் உலகின் சிறிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்

உலகின் சிறிய எலக்ட்ரிக் காரை சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
சீனாவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமான WULING HONG GUANG, சமீபத்தில் நடைபெற்ற டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 3 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த காரில் 2 இருக்கைகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. நானோ இவி-யின் உயரம் 2,497 மில்லி மீட்டராகவும், அகலம் 1,526 மில்லி மீட்டராகவும், உயரம் 1,616 மீட்டராகவும் உள்ளன. இத்தகைய குறைவான அளவுகளினால் டாடாவின் நானோ காரை காட்டிலும் தோற்றத்தில் சிறியதாக இந்த சீன எலக்ட்ரிக் கார் உள்ளது.
 
image
உலகிலேயே சிறிய எலக்ட்ரிக் கார் என்ற பெயரை மட்டுமல்லாமல், மிக மலிவான எலக்ட்ரிக் கார் என்ற பெயரையும் நானோ இவி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் எரிபொருள் என்ஜினுடன் விற்பனை செய்யப்படும் மாருதி ஆல்டோவை காட்டிலும் இந்த விலை குறைவாகும்.
 
சீனாவில் கடந்த ஆண்டு WULING HONG GUANG நிறுவனம் BAOJUN E200 என்ற பெயரில் மினி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. விற்பனையில் சக்கைப்போடு போட்ட நிலையில், எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வளர்வதில் முக்கிய பங்கும் வகித்தது. அந்த காரின் தோற்றத்தை ஒத்ததாகவே தற்போதைய நானோ இவியும் உள்ளது. நானோ என்றால் அளவில் சிறியது என்று பொருள். இதனால் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மலிவான காருக்கு நானோ என்று பெயர் வைத்தது. தற்போது இதே பெயரை சீன நிறுவனமும் பயன்படுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்