Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பழைய பள்ளிப் பேருந்தை நடமாடும் வீடாக மாற்றி அமெரிக்காவை உலா வரும் குடும்பம்!

கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை தடுக்கும் நோக்கில் அமலாகும் ஊரடங்கு நடைமுறையினால் வீடுகளில் இருந்த படி படிப்பதும், வேலை செய்வதும் வழக்கமான நடைமுறையாகி வருகிறது. ஊரடங்கு சமயங்களில் எல்லோரும் வீடடைந்து கிடக்க அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பம் பழைய பள்ளிப் பேருந்தை நடமாடும் வீடாக மாற்றி அமைத்துள்ளது. 

image

“எங்கள் குழந்தைகளுடன் ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என நானும், எனது கணவர் ஸ்பைக்கும் முடிவு செய்திருந்தோம். அதன்படி ஒரு பழைய பள்ளிப் பேருந்தை ஃபேஸ்புக் தளத்தின் மார்க்கெட் பிளேஸில் பார்த்தோம். உடனடியாக 3,500 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினோம். 

முதலில் பேருந்தின் உள் வடிவமைப்பை மாற்றினோம். தொடர்ந்து வெளிப்புறத்தில் எங்களுக்கு பிடித்த பச்சை நிறத்தில் வர்ணம் பூசினோம். சுமார் 15,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்து இரண்டு மாதங்களில் பேருந்தை நடமாடும் வீடாக மாற்றினோம். 

image

எனது கணவருக்கு சிறு வயதில் இருந்தே பேருந்தை மாற்றி அமைக்க வேண்டுமென்ற ஆர்வம் உள்ளது. அதை அவர் நேரிலும் பார்த்துள்ளார். அந்த அனுபவத்தை கொண்டு இதை செய்தோம். எங்களுக்கு கொரோனா ஊரடங்கு இந்த பணியை செய்ய உதவியது. இப்போது அமெரிக்காவின் 16 மாநிலங்களுக்கு இந்த பேருந்தின் மூலம் பயணம் செய்துள்ளோம். இது மிகவும் புதுவிதமான அனுபவம்” என தெரிவித்துள்ளார் பேருந்தில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் பயணித்து வரும் எலிசபத். 

குளியலறை, மூன்று மெத்தைகள், சிறிய சமையல் அறை மாதிரியானவை இந்த பேருந்தில் உள்ளது. மின்சார பயன்பாட்டிற்கு சோலார் பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்