Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

WiFi காலிங்! உங்கள் போனில் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவுவது ஸ்மார்ட் போன்கள் தான். இப்போது அந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் தான் WiFi காலிங். 

image

இந்த அம்சம் எப்போதே அறிமுகமாகி இருந்தாலும் இன்னும் இதனை மக்கள் பரவலாக பயன்படுத்த தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது. நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே. 

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. 

image

VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்