Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இரண்டே நாளில் ரூ. 14 கோடி ரூபாய் வசூல் செய்த ‘மாநாடு’: அதிகாரபூர்வ அறிவிப்பு

’மாநாடு’ திரைப்படம் வெளியான இரண்டே நாளில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாய் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

image

எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் நாளிலேயே ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளையும் சேர்த்து ‘மாநாடு’ திரைப்படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்