உருமாறிய ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள தென்ஆப்ரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி பயணம் செய்வது தொடர்பாக பிசிசிஐக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 17-ஆம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் பயணம் மேற்கொண்டு தலா 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் 4 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தென்ஆப்ரிக்காவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டுக்கு விமான போக்குவரத்தை நாடுகள் தடை செய்து வருகின்றன.
எனவே, இந்திய அணி தென்ஆப்ரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக மத்திய அரசிடம் அனுமதி பெறுமாறு பிசிசிஐக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவுறுத்தியுள்ளார். தங்களிடம் அனுமதி பெற பிசிசிஐக்கு மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்