Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடர் மழை எதிரொலி: பாதுகாப்பு கருதி மூடப்பட்ட தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை

தொடர்மழை காரணமாக தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. 5 அடி வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

image

இதனால் தாம்பரம் கேம் ரோடு, மேடவாக்கம் செல்ல மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்